என் மார்பகங்களை வெட்டி வீசிவிடவா? கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு நடிகை கேள்வி!

பொதுவாகவே நடிகைகள் சமூக வலைதளத்தில் தங்களுடைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது ரசிகர்கள் பலரின் விமர்சங்களுக்கு எப்போதுமே உள்ளாகிறது என்பது நாம் அறிந்த ஒன்றே.


அந்த வரிசையில் மலையாள நடிகையான த்ரிஷ்யா ரகுநாத், குளியல் புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார்.  இந்த புகைப்படமானது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது  இவர் தன்னுடைய  உடலை இழுத்து பிடித்திருக்கும் வகையிலான , உடல் அங்கங்கள் அப்படியே தெரியும் விதத்தில் மிகுந்த ஈரமாக இருக்கும் நீச்சல்  உடையில் ஆபாசமாக தோன்றும் விதமாக  புகைப்படம் ஒன்றை  வெளியிட்டார். 

இதனை பார்த்த பலரும் பல விதமாக கமெண்ட் செய்தனர். அதில் ஒருவர் மட்டும் , ’உங்களுடைய தகுதியை நீங்களே ஏன் இப்படி ஆபாசமான படத்தை வெளியிட்டு குறைத்து  கொள்கிறீர்கள்? உங்களை என் தங்கையாக   பாவித்து  இதை நான் கூறுகிறேன் ’ என்று கமெண்ட் செய்து இருந்தார் அந்த வாலிபர். இதற்கு பதில் அளித்த நடிகை த்ரிஷ்யா, "நான் எப்போதும் அனைத்தையும் மூடிக்கொண்டு தான் இருக்கிறேன்..

இன்னும் தெளிவாக கூற வேண்டும் எனில், என்னுடைய மார்பகங்களை நான் மூடிக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் பார்க்க கூடாது என்பதற்காக என்னால் என் மார்பகத்தை  வெட்டி எரிந்து விட முடியாது. இது எல்லா பெண்களுக்கும் பொதுவான ஒன்று. நான் அதை  ஒன்றும் வெளிப்படையாக காட்டவில்லை. பிரச்சனை என்னிடம் இல்லை..

பார்க்கும் உங்களது கண்களில் தான் உள்ளது, ஆகவே உங்களுடைய பார்க்கும் விதத்தை தான் நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர என்னால் எதையும் மாற்றிக்கொள்ள இயலாது" என்று கோபமாக கூறினார். நடிகையின் இந்த பதிலுக்கு பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.