திரிஷாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக நடிகை சார்மி பதிவிட்டு இருப்பது சர்ச்சையாகியுள்ளது.
ஓரினச்சேர்க்கை திருமணம்? த்ரிஷாவை கரம் பிடிக்கும் பிரபல நடிகை!

தமிழில் ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு, லாடம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சார்மி. இவர் தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தனது 37வது பிறந்த நாளை சார்மி அண்மையில் கொண்டாடினார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள ஒரு படமும் அதில் எழுதப்பட்டுள்ள வாசகங்களும் தான் தற்போது சர்ச்சையாகி உள்ளன.
அந்தப் புகைப்படத்தில் நடிகை சார்மியை திரிஷா இறுக்கமாக கட்டி அணைத்து முத்தமிட்டபடி உள்ளார். நடிகை சார்மியும் உற்சாகத்தில் சிரித்தவண்ணம் இருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு கீழ், நான் உன்னை இன்று மட்டுமல்ல என்றுமே நேசிக்கிறேன் என்று எழுதப்பட்டுள்ளது. உனது பதிலுக்காக மண்டியிட்டு காத்திருக்கிறேன் என்றும் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் பதிவிடப்பட்டுள்ளது.
பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளத்தான் சட்டம் ஒப்புதல் அளித்துவிட்டது என்றும் சார்மி பதிவிட்டு இருப்பது நெட்டிசன்களுக்கு தற்போது தீனி ஆகியுள்ளது. ஏற்கனவே நிச்சயதார்த்தம் வரை சென்று த்ரிஷா திருமணம் நின்றது. அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது. இந்த நிலையில் சார்மி சீரியசாகவே த்ரிஷாவை திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டுள்ளார் போல தெரிகிறது.
ஏனென்றால் 30 வயதை கடந்த இருவருமே இன்னும் தனிக்கட்டைகளாக வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்.