வயசு 40 ஆனாலும் பரவாயில்லை..! என்கிட்ட இருக்கு..! கவர்ச்சி காட்டப்போவதாக சீனியர் நடிகை அறிவிப்பு!

சென்னை: நடிகை பூமிகா சாவ்லா கவர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளார்.


1990களின் பிற்பகுதியில் சினிமாவில் அறிமுகமானவர் பூமிகா சாவ்லா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர், பிறகு, சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில், தற்போது 40 வயதாகும் அவர் மீண்டும் சினிமா படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் யூ டர்ன், மிடில் கிளாஸ் அப்பாயி, போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த அவர், ரூலர் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதுதவிர, வெப் சீரிஸ்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.  

தனது நடிப்பு வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும் வகையில், கவர்ச்சியான வேடங்களில் நடிக்கவும் தயாராக உள்ளதாகக் கூறுகிறார். கதைக்கு தகுந்த கவர்ச்சியை காட்டுவதில் தவறில்லை எனக் கூறும் பூமிகா, கவர்ச்சிகரமான வேடங்களை பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.