என்னை கற்பழித்த போது வீடியோ எடுத்தாங்க..! அதை திலீப்பிடம் கொடுத்துவிடாதீர்கள்! பிரபல நடிகை கதறல்!

பாலியல் கொடூரத்திற்கு ஆளான பிரபல நடிகை வீடியோ ஆதாரங்களை குற்றவாளிகளிடம் தர வேண்டாம் என்று முறையிட்டுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.


2017-ஆம் ஆண்டில் நாட்டையே புரட்டிப்போட்ட சம்பவங்களில் பிரபல மலையாள நடிகையின் கற்பழிப்பு சம்பவமும் ஒன்றாகும். கேரள காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில் பிரபல மலையாள நடிகரான திலீப் மற்றும் அவரது மனைவிக்கு தொடர்பிருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

அவர்களை சிறையில் அடைத்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சில வாரங்களிலேயே நடிகர் திலீப் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இந்த வழக்கானது 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் சமீபத்திய செய்திகளில் பாதிக்கப்பட்ட நடிகை, தன்னை பலாத்காரம் செய்த போது அவர்கள் எடுத்த வீடியோ ஆதாரங்களை குற்றவாளிகளிடம் தரக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நடிகையின் சார்பில் அவருடைய வழக்கறிஞர் சில நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் மனு சமர்ப்பித்திருந்தார். அந்த மனுவில்"சமூகத்திற்கான ஆதாரங்களை எந்நிலையிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வழங்கக்கூடாது. குறிப்பாக நடிகர் திலீப் இடமும் அந்த ஆதாரங்களை வழங்கக் கூடாது.

நீதிமன்றம் அனுமதி அளித்தால் என்னுடைய கட்சிக்காரர் தரப்பின் இந்த மனுவிற்கான விளக்கத்தை அளிக்க இயலும். ஆதாரங்களை குற்றவாளிகளிடம் கொடுத்தால் அவர்கள் எளிதில் அதனை திரித்தி விடுவார். கேரளா அரசாங்கமும் ஆதாரங்களை குற்றவாளிகளிடம் சமர்ப்பிக்க கூடாது என்றே முறையிட்டுள்ளது" என்று கூறினார்.

இந்த வழக்கானது மீண்டும் முக்கியத்துவம் பெற தொடங்கியுள்ளதை நம்மால் அறிய முடிகிறது.