புரோக்கர் வேலை பார்த்த பிரபல நடிகையின் கணவர்! கண்டுபிடித்த போலீஸ்! அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?

மும்பை: சூதாட்ட கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த பாலிவுட் நடிகை பாக்யஸ்ரீ கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மெயின் பியார் கியா என்ற படத்தின் மூலமாக பிரபலமானவர் நடிகை பாக்யஸ்ரீ. இவரது கணவர் ஹிமாலயா தசானி. இவரும் ஒரு சினிமா நடிகர்தான். பாயல் என்ற படத்தின் மூலமாக சினிமிவில் அறிமுகமான தசானி, பல்வேறு படங்களில் நடித்துள்ளதோடு, தற்போது சினிமா தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். 

இந்நிலையில், தசானிக்கு சூதாட்ட கும்பல் ஒன்றுடன் தொடர்பு உள்ளதாக, அவர்களுக்கு தசானி புரோக்கராக செயல்படுவதையும் சமீபத்தில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதன்பேரில், விசாரணை மேற்கொண்ட அம்போலி பகுதி போலீசார், தசானி மீதான புகாரை உறுதி செய்தனர்.

இதையடுத்து, அவரை, அவரது வீட்டிற்கே சென்று புதன்கிழமை கைது செய்தனர்.இச்சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.