சீனியர் நடிகை பானுப்பிரியா விரைவில் கைது? 6 செக்சன்களில் பாண்டி பஜார் போலீஸ் வழக்கு!

வீட்டில் வேலைபார்த்து வந்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


நடிகை பானுப்ரியாவின் வீட்டிற்கு வேலை செய்வதற்காக ஆந்திர மாநிலத்தில் இருந்த சிறுமி ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வேலைக்கு வந்துள்ளார்.இந்நிலையில் அச்சிறுமியை வீட்டிலுள்ளவர்கள் கொடுமை படுத்துவதாகவும் இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் அதிர்ச்சி அடைந்த சிறுமி தபால் மூலம் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் சிறுமி அனுப்பிய புகாரின் நகல் ஆகியவற்றை பாண்டிபஜார் காவல் நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர்.  

இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடிகை பானுப்பிரியா வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர் அதில் குழந்தையை கொடுமைப்படுத்துவது உறுதியான பிறகு நடிகை பானுப்பிரியா மற்றும் அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணன் மீது சிறார் நீதி சட்டம் சிறுமியை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கிருந்து மீட்கப்பட்ட சிறுமி தனது சொந்த ஊருக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.