மருத்துவமனையில் நடிகை அனுஷ்கா திடீர் அனுமதி! படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு!

ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்த நடிகை அனுஷ்காவிற்கு ஒரு சிறிய விபத்து காரணமாக காலில் பலமாக அடிபட்டுள்ளது இந்நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.


தெலுங்கில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வரும் 'சை ரா நரசிம்ம ரெட்டி' படத்திற்காக கேமியோ வேடத்தில் நடிகை அனுஷ்கா நடித்து வருகிறார். இந்த படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ளார். அமிதாப் பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி, சுதீப், தமன்னா என மிகப்பெரிய நட்சத்தர கூட்டமே இப்படத்துக்காக பணியாற்றி வருகிறது. இது ஒரு பாரம்பரிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகை அனுஷ்காவும் நடிக்கிறார். அனுஷ்கா தொடர்பான காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது எதிர்பாராதவிதமாக அனுஷ்கா கால் தவறி கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு படக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

காயத்தை பரிசோதித்த மருத்துவர் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் இரண்டு நாள் அவரை ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து இரண்டு மூன்று நாட்கள் ஓய்வுக்குப் பிறகு அனுஷ்கா மீண்டும் படப்பிடிப்புக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது