தற்கொலைக்கு முன்னர் நடிகை சில்க் ஸ்மிதா செய்த செயல்..! உயிர் தோழி தற்போது வெளியிட்ட நெகிழ வைக்கும் தகவல்!

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னால் தன்னை சந்திக்க வேண்டும் என சில்க் ஸ்மிதா போன் செய்ததாக நடிகை அனுராதா இப்போது தெரிவித்துள்ளார்.


1996ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை முடிவுக்கு காதல் தோல்வி, குடிப்பழக்கம், மன அழுத்தம் போன்ற காரணங்களால் தற்கொலை செய்து கொண்டதாக பலர் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தினர். ஆனால் அவர் மரணத்திற்கு உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. 

இந்நிலையில் அவருடன் பணியாற்றி அந்தக் காலத்து நடிகை அனுராதா தற்போது ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொள்வதற்கு 4 நாட்களுக்கு முன்னர் அனுராதா வீட்டிற்கு சென்று அவரது குழந்தைகளுடன் விளையாடி விட்டு சென்றார். பின்னர் தற்கொலைக்கு ஒரு நாள் முன்னர், அனுராதாவுக்கு போன் செய்து, அவரை பார்க்க வேண்டும் என கேட்டுள்ளார்.

ஆனால் அதற்கு அனுராதா கணவர் வெளிநாட்டில் இருப்பதால், வீட்டில் குழந்தைகளை பார்த்துக் கொள்ள யாருமில்லை என்றும், மறுநாள் வருவதாகவும் கூறியுள்ளார். இதை அடுதது சில்க் ஸ்மிதா போனை வைத்துவிட்டார். மறுநாள் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்ட செய்தி வந்தவுடன் அனுராதா அதிர்ச்சி அடைந்துள்ளார். ஒருவேளை அன்றே நேரில் சென்று சில்க் ஸ்மிதாவை சந்தித்திருந்தால் பிரச்சனைகளை பேசி அவரது தற்கொலையை தடுத்திருக்கலாம் என அனுராதா தற்போது தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர்தான் பின்னாளில் சினிமா உலகிற்கு வந்தவுடன் சில்க் ஸ்மிதா என்று அறியப்பட்டவர். கவர்ச்சி நடிகையாக மட்டுமே அறியப்பட்ட சில்க் ஸ்மிதா 1980ம் ஆண்டு வெளிவந்த வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் புகழ் பெற்றார், 1980களில் சர்ச்சைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட 17 ஆண்டுகளில், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.