பும்ராவை மயக்கி மடியில் போட்ட மலையாள நடிகை!

பொதுவாக இந்திய கிரிக்கெட் வீரரான பும்ராவின் யார்காரில் கிளீன் போல்ட் ஆகும் வீரர்களின் மத்தியில் அவரையே கிளீன் போல்ட் ஆக்கியுள்ளார் பிரபல நடிகை அனுபமா.

யாக்கர் பந்துகளை வீசுவதில் பேர் போன இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நடப்பு  உலகக் கோப்பை தொடரிலும்  சிறப்பாக பந்துவீசி வருகிறார்.  

மிகச்சசிறப்பாக யாக்கர் பந்துகளை வீசி  தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முன்னணியில் இருந்து வருகிறார். இது மட்டும் இல்லாமல்  ஐசிசி பவுலர்கள் தரவரிசைப் பட்டியலில் பும்ரா தான் முதலிடம்.

எப்போதுமே பூமாராவிடம் தான், கிரிக்கெட் வீரர்கள் சிக்கி தவிப்பார்கள்.  ஆனால்  தற்போது அவர் வளர்ந்து வரும் இளம் நடிகையான அனுபமா கண்களில் சிக்கி தவித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசு கிசுப்பு பரவி வருகிறது.

நடிகை அனுபமா மலையாள திரையுலகில் "ப்ரேமம்" திரைப்படத்தின் வாயிலாக சினிமா துறையில் கால்பதித்தவர். இந்த படத்தில் பிரபல நடிகர் நிவின் பாலியுடன் நடித்திருந்தார் அனுபமா. நடித்த முதல் திரைப்படத்திலேயே பெரும் ரசிகர்களை தன்னுடைய அழகான தோற்றத்தின் மூலம் கவர்ந்தார் என்றே கூற வேண்டும்.  

இதற்கு பின் தமிழ் சினிமாவிலும் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இதன்மூலம் தமிழ் ரசிகர்களையும்  கவர இவர்  தவறவில்லை.

தற்போது அனுபமா, மலையாள திரைப்படங்களில் மட்டும் பிஸியாக வேலைபார்த்து வருகிறார். இன்னும் இந்த படத்தை பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை அனுபமா தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.   ட்விட்டரில் பும்ரா ஃபாலோ செய்யும் பல பேர் கிரிக்கெட் வீரர்கள் தான். 

ஆனால் இவரை ஃபாலோ செய்யும்  ஒரே நடிகை அனுபமா தான். அதுமட்டும் இல்லாமல் பும்ராவும் அனுபமாவை ஃபாலோ செய்கிறார்.

இருவரும் ஒருவரை ஒருவர் ஃபாலோ செய்வதும் போஸ்ட்களுக்கு லைக் போடுவதும் இவர்கள் ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.