20 வயதில் போகக்கூடாத இடத்திற்கு போன இளம் நடிகை! பிறகு நேர்ந்த விபரீதம்!

பாலிவுட் இளம் நடிகை ஒருவருக்கு இரவு கேளிக்கை விடுதியில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த மே மாதம் இந்தியில் வெளியான திரைப்படம் ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் 2. இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் சுமார் 100 கோடி ரூபாய் வசூலித்தது. இந்தப் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் இளம் நடிகை அனன்யா பாண்டே. முதல் படத்திலேயே நடிப்பில் அசத்திய அவருக்கு இன்ஸ்டாகிராமில் 33 லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த இளம் நடிகைக்கு மும்பையில் உள்ள இரவு கேளிக்கை விடுதியில் அனுமதி மறுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இது அந்த நடிகையின் ரசிகர்களை கோபப்படுத்தியது. இந்த நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் கேளிக்கை விடுதி யானது 24 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் உற்சாகமாக பொழுதைக் கழிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்.

ஆனால் அனன்யா பாண்டேவுக்கு 20 வயதே ஆகும் காரணத்தால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அனன்யா பாண்டே அடுத்ததாக படி பட்னி ஆர் ஓ என்ற ரீமேக் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். பழம்பெரும் நடிகர் சஞ்சீவ் குமார் 1978 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.