கள்ளக்காதலன் விட்ட ஒரே ஒரு அறை! கேட்கும் திறனை இழந்த பிரபல நடிகை!

நடிகர் சல்மான் கானின் முதன்மை ஊழியர் மீது நடிகை ஆன்ட்ரியா டிசோஸா பரபரப்பான புகார் கூறியுள்ளார்.


நடிகர் சல்மான் கான், #BeingHuman என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதன் தலைமைச் செயல் அதிகாரியாக, மணிஷ் மந்தானா செயல்பட்டு வருகிறார். அத்துடன், மந்தானா ரீடெய்ல் வென்சர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தையும் நிர்வகித்து வரும் மணிஷ், கடந்த 2015ம் ஆண்டு முதலாக, ஆன்ட்ரியாவுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். 

மணிஷ்க்கு ஏற்கனவே திருமணமான உண்மை தெரிந்தபிறகும், ஆன்ட்ரியாவும் அவருடன் தொடர்பு கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் தனது கள்ளக்காதலி நடிகை ஆன்ட்ரியை கைவிட்டு, வேறொரு பெண்கூட மணிஷ் பழக தொடங்கியிருக்கிறார். இதன்பேரில், கடந்த 2017 நவம்பர் மாதத்தில் இருவரும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

அப்போது, மணிஷ் ஆன்ட்ரியா டிசோஸாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில், ஆன்ட்ரியா, தனது வலது காதில் கேட்கும் சக்தியை இழந்துவிட்டார். இதன்பேரில், ஆன்ட்ரியா மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். இதையேற்று, போலீசார் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர்.