தனி வீடு! தனி குடித்தனம்! தனி ஹோட்டல்! தனி ரூம்! ஆனால் கல்யாணத்துக்கு மட்டும் நோ! நடிகையின் விபரீத கண்டிசன்!

தனி வீடு, தனி குடித்தனம் போல் வாழ்ந்தாலும் டைரக்டருடன் திருமணத்திற்கு மட்டும் நோ என்று திட்டவட்டமாக நடிகை கூறியுள்ளராம்.


தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நம்ம நாயகி தான் ராணி. இவருடன் நடிக்க பீல்ட் அவுட் ஆன ஹீரோ முதல் பீல்டுக்கு வந்த நாயகன்கள் வரை நம்ம நாயகியுடன் ஜோடி போடத்தான் துடியாய் துடிப்பார்கள். நம்ம நாயகியும் கதை, கரன்சி இரண்டும் ஓகே என்றால் யாருடன் வேண்டுமானாலும் ஓகே என்று கூறிவிடுவார். 

பீல்டிற்கு வந்தது முதல் நடிக்கும் படத்தில் இருக்கும் நாயகன், தயாரிப்பாளர், டைரக்டர் என யாருடனாவது காதல் வயப்படுவது தான் நம்ம நாயகியின் வீக்னெஸ் பாய்ன்டாக இருந்தது. இதனை கச்சிதமாக பயன்படுத்தி தேவையான வரை யூஸ் செய்துவிட்டு நடிகையை வீசி எறிந்தனர் முன்னாள் காதலர்கள்.

இதனால் வெறுத்துப் போய் பீல்டில் இருந்து ஒதுங்கியவரை மீண்டும் நடிக்க வந்த இயக்குனர் தான் நாயகியின் லேட்டஸ்ட் காதலன். இருவரும் சுமார் ஐந்து வருடங்களாக காதலித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் சென்னை, ஐதரபாத், கொச்சி என மூன்று ஊர்களில் மூன்று வீடு எடுத்து தனிக்குடித்தனம் செய்து வருகின்றனர்.

படப்பிடிப்பிற்கு சென்றாலும் கூட நடிகைக்கு தனி ஹோட்டலில் தனி ரூம். அந்த ரூமில் நம்ம டைரக்டருடன் சேர்ந்து கும்மி அடிப்பது தான் நாயகியின் என்டெர்டெயின்மென்ட். இருவருக்கும் இப்போ கல்யாணம், நாளை கல்யாணம் என தகவல்கள் மட்டும் வெளியாகும் ஆனால் ஒன்றும் நடைபெறாது. இது குறித்து விசாரித்த போது தான் நடிகைக்கு திருமணத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லையாம், பிடித்திருந்தால் லிவிங் டுகெதர் இல்லை என்றால் குட்பாய் என்று கூறியே இயக்குனருடன் பழகி வருகிறாராம்.