அம்மாவுடன் அற்புதமான டேட்டிங்! சமந்தாவின் கொழுந்தன் வெளியிடட்ட புகைப்படத்தால் பெரும் சர்ச்சை!

தெலுங்கு சினிமாவில் கடந்த பல வருடங்களாக சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நாகார்ஜுனா . இவருக்கு அமலா என்ற மனைவி இருக்கிறார்.


அமலாவின் மூலம் நாகார்ஜுனா விற்கு இரண்டு ஆண் மகன்கள் இருக்கின்றனர். இருவருமே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது வரை வலம் வருகின்றனர்.

 அவர்களில் முதல் மகன் தான் நாகசைதன்யா. இவர் சமந்தாவின் காதல் கணவர் ஆவார். நாக சைதன்யாவிற்கு அகில் என்ற ஒரு தம்பி இருக்கிறார். அவரும் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தாவின் கொழுந்தனாரும், நாக சைதன்யாவின் தம்பியுமான அகில் நேற்று இரவு தனது அம்மா அமலாவுடன் இரவு ஹோட்டலில் சாப்பிட சென்றுள்ளார்.

 இது ஒரு அற்புதமான நாளாக அமைந்தது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் மேலும் எனது அழகான அம்மாவுடன் ஒரு அற்புதமான டேட்டிங் இரவு முடிந்தது. பல நாட்களுக்கு பின்னர் ஒரு அற்புதமான இரவு உணவு அருந்தி இருக்கிறேன். லவ் யூ அம்மா என்று பதிவு செய்துள்ளார் சமந்தாவின் கொழுந்தன் அகில்.