நடிகை அமலா பால் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ஆடை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் ஆனது ரசிகர்களிடம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
அமலா பால் - VJ ரம்யா உதட்டு முத்தம்! செம வைரல் வீடியோ!

நடிகை அமலா பால் டீசரில் துணி ஏதும் அணியாமல் துணிச்சலாக நடித்திருந்தார். இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது. இந்நிலையில் இன்று வெளிவந்த ஆடை படத்தின் ட்ரைலரிலும் சில காட்சிகள் ரசிகர்களை அதிரவைத்துள்ளது. குறிப்பாக விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யாவுடன் நடிகர் அமலா பால் லிப் லாக் அடிப்பது போல ஒரு காட்சி ட்ரைலரில் உள்ளது.
சர்ச்சைக்குள்ளான இந்த காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தின் ட்ரைலரில் நடிகை அமலா பால் புகை பிடிப்பது போன்ற காட்சியும் உள்ளது. இந்த ட்ரைலரை பார்க்கும் போது நடிகை அமலா பால் இந்த படத்தில் மாடர்ன் பெண் கதாபாத்திரத்திலும் மற்றும் எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் பெண்ணாக நடித்துள்ளது போல தெரிகிறது.
ஆகமொத்தத்தில்இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸர் தமிழ் திரையுலகையே ஒரு கலக்கு கலக்கியுள்ளது என்றே கூறலாம்.