என்னை கிழித்து தொங்கவிட்டவன் அவன்! காதலன் குறித்து அமலா பால் வெளியிட்ட ஹாட் அப்டேட்!

சென்னை: ஆடை படத்தில் தைரியமாக நடிப்பதற்கு எனது காதலன் அளித்த ஊக்கம்தான் முக்கிய காரணம் என்று நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.


ஆடை படத்தில் நடிக்க என் காதலனின் ஊக்கம் முக்கிய காரணம்: அமலா பால்

அமலா பால் நடித்துள்ள ஆடை படம் தற்போது ரிலீசாகி, நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி அமலா பால் கருத்து கூறியுள்ளார்.

அதில், ''ஆடை படத்தில் நடிக்கும் முன்பாக, அந்த படத்தின் கதையை எனது காதலனிடம்தான் முதலில் கூறினேன். பிறகு, அதில் எப்படி நடிப்பது என ஆலோசனை கேட்டேன். என் காதலன்தான இந்த படத்தில் நடிக்க தேவையான தைரியம், ஊக்கம் வழங்கினார்.

மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்னை வலுப்படுத்தவும் உதவினார். உண்மையான காதல்தான் இதற்கு காரணம். அதன் அடிப்படையில்தான் ஆடை படத்தில் நடித்தேன். என்னைவிட என் காதலனுக்கு சினிமா மேல் அதிக ஆர்வம் உள்ளது.

அந்த ஆர்வம்தான் எனக்கு தற்போது ஞானம் அளித்து வருகிறது,'' என அமலா பால் தன் காதலனுக்கு பாராட்டு மழை பொழிந்துள்ளார். 

இயக்குனர் விஜயிடம் இருந்து பிரிந்த நிலையில், அமலா பால் தற்போது ரகசியமாக ஒரு நபரை காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது.