அடுத்தடுத்து 2 காதலர்களிடம் மோசம் போய்விட்டேன்! புலம்பும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இரண்டு முறை காதல் கைகூடாத அதிர்ச்சித் தகவலை அவரே வெளியிட்டிருக்கிறார்.


சினிமாவுக்கு வந்த புதிதில் பெரிதும் கவனிக்கப்படாத நடிகையாக இருந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரை ஒட்டுமொத்த இந்திய திரை உலகமும் திரும்பி பார்க்க வைத்த ஒரு படம் காக்கா முட்டை. இந்தப் படத்திற்குப் பின் ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் திரையுலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார்.

 

வடசென்னை படத்தில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. அதன் பிறகு கிரிக்கெட் வீராங்கனையாக இவர் நடித்த கானா திரைப்படமும் ஐஸ்வர்யா ராஜேஷின் கிரீடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லை பதிய வைத்தது. அடுத்ததாக விக்ரம் நடித்துவரும் துருவநட்சத்திரம் திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார்.

 

தெலுங்கில் விஜய் தேவார கொண்டா நடிக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிஸியாக உள்ளார். இந்த நிலையில் விருது நிகழ்ச்சி ஒன்றின்போது தனது பழைய காதல் பற்றி நடிகை மனம் திறந்தார்.

 

ஒருமுறை அல்ல இருமுறை யும் காதலித்து அது கைகூடாமல் போன கதையை கேட்டு அங்கிருந்தவர்கள் மட்டுமல்ல, ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது தன்னுடன் படிக்கும் இளைஞனை காதலித்ததாகவும், ஆனால் தனது காதலுக்கு தனது தோழியே வில்லி ஆகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

இரண்டாவது முறையும் ஒருவரை காதலித்ததாகவும் அது பல்வேறு காரணங்களால் கைகூடாமல் போய்விட்டதாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்திருக்கிறார். அந்த நபரை தான் மிகவும் நேசித்த தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

தான் மிகவும் சென்சிட்டிவான பெண் எனவும் கூறிய நடிகை, காதல் கைகூடாமல் போனதால் மிகவும் வருத்தமுற்றதாக கவலை பட்டுள்ளார். 2 பேரை காதலித்ததாகவும் ஆனால் இரண்டு பேருமே தன்னை ஏமாற்றி மோசம் செய்துவிட்டதாகவும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.