போலியோ சொட்டு மருந்து வழக்கு! நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா பெயர் சேர்ப்பு! ரசிகர்கள் அதிர்ச்சி!

போலியோ சொட்டு மருந்து வழக்கில், விஜய், அஜித் மற்றும் சூர்யா ஆகியோரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.


விஜய், அஜித், சூர்யா ரசிகர்கள் யாரும் கவலைப்படாமல் தொடர்ந்து படியுங்கள். குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து விடுவது தொடர்பாக, தமிழக மக்களிடையே போதிய அக்கறை இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், போலியோ நோய் பாதிப்பு மீண்டும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதுபற்றி இளம் தலைமுறை பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையில், விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்கள், போலியோ சொட்டு மருந்தின் முக்கியத்துவம் பற்றிய விளம்பர பிரச்சாரங்கள் செய்ய முன்வரும்படி உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இந்த நடிகர்களுக்கு அதிக ரசிகர், ரசிகைகள் உள்ளதால், இவர்களின் சொல்லைக் கேட்டு, பலரும் போலியோ சொட்டு மருந்து திட்டத்தை ஆதரிப்பார்கள். எனவே, போலியோ சொட்டு மருந்தின் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு உள்ளது. இதை இந்த நடிகர்கள் நிறைவேற்ற வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் எடுத்துக் கூறியுள்ளது.

விஜய் கொக்க கோலா, நகைக்கடை விளம்பரங்களில் நடித்து கல்லா கட்டி வருபவர். இதே போல் சூர்யாவும் நடிக்காத விளம்பரமே இல்லை. சரவணா ஸ்டோர் விளம்பரம் வரை நடித்து பணம் சம்பாதித்து வருகிறார். இதே போல் சன்ரைஸ் விளம்பரத்தில் ஒரு காலத்தில் அஜித் நடித்துள்ளார்.

எனவே போலியோ விளம்பரத்தில் நடிக்க வேண்டும் என்று இந்த மூன்று நடிகர்களுக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட வாய்ப்புள்ளது.