வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி! பாகுபலி நடிகர் கைது! சக நடிகையுடன் தகாத உறவா?

ஹைதராபாத்தில் பிரபல நடிகரான மது பிரகாஷ் சக நடிகையுடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்ட அவரது மனைவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் சந்தேகத்தின்பேரில் போலீசார் அவரை கைது செய்து உள்ளனர்


பாகுபலி படத்தில்  நடித்தவர் மது பிரகாஷ். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு பாரதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் ஐதராபாத்தில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் அண்மைக்காலத்தில் மது பிரகாஷ் ஒழுங்காக வீட்டுக்கு வருவதில்லை என கூறப்படுகிறது இதையடுத்து பாரதி அவரது திரையுலக நண்பர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் விசாரித்தபோது அவருக்கும் சக நடிகை ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக தெரியவந்தது

இது தொடர்பாக பாரதி தனது கணவருடன் அவ்வப்போது சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்மையில் ஒரு நாள் மது பிரகாஷ் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று விட்டு அப்படியே படப்பிடிப்புக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று விட்டார்.

அவர் சென்ற பிறகு அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாரதி அவர் உடனடியாக திரும்பி வராவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது, ஆனால் அதனை மது பிரகாஷ் பொருட்படுத்தாத நிலையில் அன்று இரவு அவர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது பாரதி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது

இதனால் அதிர்ச்சி அடைந்த மது பிரகாஷ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் ஆனால் மது பிரகாஷ் மீது சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அவர் மீது வரதட்சணை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.