விஜயகாந்த் கட்சியில் விருப்பமனு தாக்கல் செய்த திரைப்பட நடிகர்!

தேனி மாவட்ட தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு இன்றுஅளிக்கப்பட்டது.


தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு இன்றுஅளிக்கப்பட்டது. இதில் மாநில இளைஞரணி துணைச் செயலாளரும் திரைப்பட நடிகருமான ராஜேந்திரநாத் அவர்கள் தலைமையிலும் தேனி மாவட்ட கழக செயலாளர் எம் எஸ் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் முன்னிலையிலும் விருப்ப மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட கவுன்சிலருக்கு மாநில பொதுக்குழு உறுப்பினரும் கொடுவிலார்பட்டி விவசாய சங்க தலைவருமாகிய சீனி ராஜ் மற்றும்தேனி மாவட்டம் நகரம் ஒன்றியம் பேரூராட்சி மற்றும் சார்பு அணி நிர்வாகிகளும் தொண்டர்களும் வந்துவிருப்பமனுவை பெற்றுக் கொண்டனார்.

விருப்ப மனுவிற்கு முன்தேனி அல்லிநகரம் சாலையில் ரயில்வே கேட்டிலிருந்து தே.மு.தி.க அலுவலகம் வரை ஊர்வலமாக வந்து உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுவை கழக நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனார்.