விஷ்ணு விஷால் மனைவியை பிரிய இந்த இளம் பெண் தான் காரணமா? வெளியானது புகைப்படம்!

விஷ்ணு விஷால் வெளியிட்ட ஒரு புகைப்படம் மூலமாக அவர் தனது மனைவியை பிரிய அதில் இருக்கும் பேட்மிண்டன் வீராங்கனை தான் காரணமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் நடிக்கத் தெரிந்த நடிகர் எனும் பெயரையும் விஷ்ணுக்கு பெற்றுத் தந்தது. ஆனால் ராட்சசன் படம் வெளியான நிலையில் விஷ்ணு தனது மனைவி ரஜினியை பிரிந்தார்.

விஷ்ணு தனது மனைவியை பிரிந்ததற்கு பல்வேறு காரணங்களை கூறினார். பிற நடிகைகளுடன் நெருக்கமாக நடிப்பதை தனது மனைவி ரஜினியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் இதனால் ஏற்பட்ட பிரச்சனையே தனது மனைவியை தான் பிரிய காரணம் என்றும் விஷ்ணு கூறியிருந்தார்.

ஆனால் ராட்சசன் படத்தில் நடித்த போது அமலா பாலுடன் ஏற்பட்ட நெருக்கமே விஷ்ணுவின் திருமண வாழ்வில் புயல் வீச காரணமாகிவிட்டதாக கூறப்பட்டது. இதனை இருவருமே மறுத்துள்ளனர். இந்த நிலையில் விஷ்ணு தனது ட்விட்டர் பக்கத்தில் இளம் பெண் ஒருவருடன் வெளியிட்டுள்ள புகைப்படம் மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.

அந்த பெண் வேறு யாரும் இல்லை. இந்திய அளவில் பிரபலமான பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா தான். அவருடன் மிகவும் நெருக்கமாக விஷ்ணு செல்ஃபி எடுத்து வெளியிட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே ஏதேனும் உறவு இருக்குமோ? இது தான் விஷ்ணு தனது மனைவியை பிரிய காரணமோ என்று பேச்சு எழுந்துள்ளது.