திருமணம் செய்ய விஷாலை விலை கொடுத்து வாங்கிய நடிகை அனிஷா! வெளியானது பரபரப்பு புகார்!

நடிகர் விஷாலை விலை கொடுத்து வாங்கி விட்டதாக ரசிகர் ஒருவர் பதிவிட்டதற்கு நடிகை அனிஷா ரெட்டி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.


செல்லமே, திமிரு, சண்டக்கோழி உள்ளிட்ட மாபெரும் ஹிட் படங்களில் நடித்த நடிகர் விஷால், 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் உள்ளார். 41 வயதாகும் விஷால் எப்போது திருமணம் செய்து கொள்வார் என்பது தொடர்பாக எதிர்பார்ப்பு நிலவி வந்தது. 

 

   ஆனால் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட வேலைகள் முழுமை பெற்ற பின்னரே தனது திருமணம் நடைபெறும் என்று விஷால் அறிவித்திருந்தார். இவர் சரத்குமாரின் மகளான வரலட்சுமியை காதலிப்பதாகவும் அவரைத்தான் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் வதந்தி பரவியது.

 

  இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக அண்மையில் ஒரு தித்திப்பான செய்தியை நடிகர் விஷால் அறிவித்தார். தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, பெல்லி சூப்பலு ஆகிய பிரபல திரைப்படங்களில் நடித்த நடிகை அனிஷா ரெட்டியுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக அவர் அறிவித்தார்.

 

   இருவருக்கும் ஆகஸ்டில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் நடிகர் விஷால் தெரிவித்திருந்தார். இது அவரது ரசிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது. ஆனால் திருமணமே வேண்டாம் என்று இருந்த விஷால் திடீரென திருமணத்திற்கு ஒப்புக் கொண்டது எப்படி என்று கேள்விகள் எழுந்தன.

 

   பொருளாதார ரீதியில் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கியுள்ள விஷால் நடிகை அனிஷாவை திருமணம் செய்வதே அவரது சொத்துக்காக தான் என்று புகார்கள் எழுந்தன. மேலும் விஷால் மீது ஆசைப்பட்ட நடிகை அனிஷா தனது தந்தை மூலமாக அவரை பணம் கொடுத்து வாங்கி திருமணம் செய்து கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

 

இந்த நிலையில் பலரும் விஷால் – அனிஷா ஜோடியை சமூக வலைதளங்களில் வாழ்த்தி வரும் நிலையில் ரசிகர் ஒருவர், நடிகர் விஷாலை விலை கொடுத்து வாங்கி விட்டதாகவும் அவரை தனியாக விட்டு விடுமாறும் பதிவிட்டிருந்தார்.

 

  இதற்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை அனிஷா ரெட்டி, விலை கொடுத்து தான் விஷாலை வாங்கி இருப்பேன் என்று நீங்கள் எண்ணினால் அவர் மீது உங்களுக்கு மரியாதை இல்லை என்றுதான் அர்த்தம் என்று கூறியுள்ளார். வாழ்க்கை மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்றும் அந்த ரசிகரை நடிகை கேட்டுக்கொண்டு பதிவை முடித்துள்ளார்.