சினிமாத்துறையில் நுழைந்த விஜயின் மனைவி சங்கீதா! எந்த படத்துல தெரியுமா?

இளையதளபதி விஜய்யின் மகன் இயக்கி நடித்துள்ள சிரி என்ற குறும்படத்துக்கு வரவேற்பு பெருகியுள்ளது.


இளைய தளபதி விஜய் சங்கீதா தம்பதியின் மூத்த மகன் சஞ்சய். வேட்டைக்காரன் படத்தில் நான் அடிச்சா தாங்க மாட்ட பாடலில் தனது தந்தையுடன் இவர் ஆட்டம் போட்டு இருப்பார். உருவத்தில் தனது தந்தையைப் போலவே இருக்கும் இவர் மனதளவில் அவரது தாத்தா எஸ்ஏ சந்திரசேகரன் போல் உள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர். 

இதற்கு காரணம் சஞ்சய் குறும்படங்களை மிகவும் நேர்த்தியாக இயக்கி நடிப்பதுதான். ஜங்ஷன் என்ற குறும்படத்தை சஞ்சய் கடந்த சில மாதங்களுக்கு முன் இயக்கி நடித்து வெளியிட்டிருந்தார். இதற்கு விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுவான சினிமா ரசிகர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.  

இந்த நிலையில் உண்மையில் ஒரு குறும்படத்தை சஞ்சய் விஜய் இயக்கி நடித்து வெளியிட்டுள்ளார். சிரி என்று பெயரிடப்பட்ட அந்த குறும்படம் வழக்கம்போல் இணையதளத்தில் வைரல் ஆனது. ஜித்தன் திரைப்படத்தை போல் சில நிமிடங்கள் மனிதன் மறைவது போன்று இந்த குறும்படத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். 

இந்தக் குறும்படத்தை பொறுத்தவரையில் ருசிகரமான தகவல் என்னவென்றால் இதற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியது அவரது தாய் சங்கீதா என்பதாகும். தனது மகனுக்காக அவரை களத்தில் இறங்கி ஒளிப்பதிவை கையில் எடுத்துள்ளார். இந்தத் தகவல் தற்போது கசிந்து அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளது. 

இளையதளபதி விஜயின் குடும்பத்தில் அனைவரும் திரைத்துறையில் கெத்து காட்டுவதாக பலரும் புருவத்தை உயர்த்தி உள்ளனர்.