ஏழ்மையில் தவித்த இளம் விண்வெளி வீராங்கனை! ரூ.8 லட்சம் அள்ளிக் கொடுத்த விஜய்சேதுபதி! எதுக்கு தெரியுமா?

தேனியை சேர்ந்த மாணவி விண்வெளி சார்ந்த பொறியியல் பட்டப்படிப்பை முடித்த நிலையில், அடுத்தகட்டமாக விண்வெளிக்கு செல்ல பயிற்சிக்கான நிதி செலவை நடிகர் விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது..


தேனி, அல்லிநகரத்தைச் சேர்ந்த பெயிண்டர் வேலை செய்யும் தாமோதரன் மகள் உதய கீர்த்திகா, தமிழ் வழியில் பள்ளி படிப்பை முடித்தவர், உக்ரைன் நாட்டில் விண்வெளி சார்ந்த பொறியியல் படிப்பை படித்து முடித்துள்ளார்.

அடுத்தகட்டமாக  போலந்து நாட்டின், "அனலாக் அஸ்ட்ரானட் "பயிற்சி மையத்தில் விண்வெளி வீராங்கனைக்கான பயிற்சி பெறுவதற்கு அரிய வாய்ப்பு கிடைத்தும், போதிய வசதி இல்லாமல் தவித்து வந்துள்ளார்.

இது குறித்து கேள்வியுற்ற நடிகர் விஜய் சேதுபதி தாமாக முன் வந்து, மாணவியின் பயிற்சி செலவை ஏற்றுக்கொண்டுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர் மன்ற நிர்வாகிகள், சென்னை உள்ள அலுவலகத்தில்  மாணவி உதய கீர்த்திகாவிடம் 8 லட்சம் ரூ காசோலை யை வழங்கினர் மேலும்  மாணவியை போனில் தொடர்பு கொண்ட நடிகர் விஜய் சேதுபதி தன் சார்பில் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.