நான் இருக்கேன் கவலைப்படாதே..! உயிருக்கு போராடும் நடிகரின் மருத்துவ செலவு முழுவதையும் ஏற்ற விஜய்சேதுபதி! நெகிழ்ச்சி சம்பவம்!

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது மட்டுமின்றி பண உதவி செய்துள்ளர் நடிகர் விஜய் சேதுபதி. அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.


தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நகைச்சுவை நடிகராக வலம்வந்த லோகேஷ் பாப் விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் உள்ளிட்ட சில படஙகளில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கை, கால் செயலிழந்த நிலையில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் மருத்துவ செலவுக்கு உதவுமாறு அவரது நண்பர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இதையடுத்து சில பிரபலங்கள் தங்களால் முடிந்த பண உதவியை செய்து வந்தனர். இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று படிப்படியாக குணமடைந்து வருகிறார்.

இதை கேள்விப்பட்ட நடிகர் விஜய் சேதுபதி நேரடியாக மருத்துவமனை சென்று நலம் விசாரித்தார்.மேலும் மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்துள்ளார் அவர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு நடிகர் லோகேஷ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் நடிகர் விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்தனர்.