5வது முறையாக அந்த நடிகையுடன்..! அடம்பிடிக்கும் விஜய்சேதுபதி!

"நாம் கஷ்டப்பட்டு உழைத்தால் அதற்கான பலனை கண்கூட பார்க்கலாம்" என்ற தத்துவத்தை உண்மை என நிரூபித்தவர் நடிகர் விஜய் சேதுபதி.


இவர் சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் மிகவும் சிறிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார்.  அதன் பின் அவருடைய கடின உழைப்பின் காரணாமாக அவருக்கு பல நல்ல கடதாபாத்திரங்கள் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை மிகவும் திறைமையாக பயன்படுத்திக்கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, மிகுந்த குறுகிய காலத்திலேயே மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை தன்  வசப்படுத்தினார் என்றே கூறலாம்.

கார்த்திக் சுப்புராஜின் பீட்சா படத்திலும் பாலாஜி தரணிதரனின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திலும் முன்னணி கதை மாந்தராக நடித்தார். நளன் குமரசாமியின் சூது கவ்வும் என்ற படத்திலும் முன்னணி கதை மாந்தராக நடித்தார். பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான  ஐஸ்வர்யா ராஜேஷ்,  இவருக்கு ஜோடியாக பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, இடம் பொருள் ஏவல், ரம்மி ஆகிய படங்களில் நடித்து உள்ளார். மிகவும் எளிய காதாபாத்திரங்களை கூட தன்னுடைய நடிப்பினாலஅதனுடைய முக்கியதுவத்தை கூடும் வகையில் நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவருடைய சிறந்த நடிப்பிற்கு உதாரணமாக தமிழில் வெளியான காக்கா முட்டை, கனா ஆகிய திரைப்படங்களை கூறலாம்.  இந்த திரைப்படத்திற்கான விருதுகளையும் இவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் இவரும் நடிகர் விஜய் சேதுபதியும் இணைந்து 4 திரைப்படங்களில் நடித்து இருந்த நிலையில், தற்போது மீண்டும் 5 வது முறையாக இந்த ஜோடி தமிழ் திரையை மேலும் ஒருமுறை கலக்க வருகிறது என்று கூறப்படுகிறது. 

 கே.ஆர்.ஜே ஸ்டுடியோஸ் நிறுவனத்தின்  தயாரிப்பில் அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் உருவாக இருக்கும்  படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அவர் கவுரவ வேடத்தில்  நடிக்க போவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை நடிக்க வைக்கலாம் என படக் குழுவினர் சார்பில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கூடிய சீக்கிரம் அதிகார பூர்வ தகவல் இந்த படக் குழுவினர் சாபில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.