தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர்.
மேடையில் நிகழ்ந்த தவறான சம்பவம்! கண்ணீர் விட்ட தொகுப்பாளினி! மன்னிப்பு கேட்ட தளபதி விஜய்!

அவருக்கும் கயல் சந்திரனிற்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் தற்போது ஒரு குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. குழந்தை தற்போது ஓரளவிற்கு பெரிதாக வளர்ந்த உடன் மீண்டும் தொகுப்பாளினி பணிக்கு திரும்பியுள்ளார் அஞ்சனா .
சின்னத்திரையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு முன்னர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த விஜய்யின் புலி படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார் அஞ்சனா. இந்த நிகழ்ச்சியில் விஜய் மேடைக்கு வந்தவுடன் அவரை தொகுப்பாளினி அஞ்சனா அவரை ஒரு பாட்டு பாட சொன்னார்.
ஆனால் வேறு சில வேலைகளில் பிஸியாக இருந்த விஜய் படங்களில் பணியாற்றிய டெக்னீஷியன்களுக்கு நினைவு பரிசுகளை மேடையில் வழங்கி விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார். இதனால் மேடையில் மூக்குடைந்த அஞ்சனா அரங்க மேடையில் நிகழ்ச்சி முழுவதும் சோகமாக இருந்தார். பின்னர் அந்த நிகழ்ச்சி முடிந்து அடுத்த நாளே விஜயின் ஆபீஸிலிருந்து அஞ்சனாவிற்கு போன் வந்துள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது இந்த விழாவின்போது விஜய் சாருக்கு நாங்கள் சில நினைவு பரிசுகளை வழங்கினோம். மேலும் அவரும் தனது படத்தில் வேலை செய்தவர்களுக்கு சில நினைவு பரிசுகளை வழங்கினார். விஜய் சார் அந்த மேடையில் ஏதோ பேச வேண்டும் என்று முன்னரே யோசித்து வைத்து விட்டு வந்திருந்தார்.
அது தெரியாமல் நான் அவரிடம் பாட்டு பாட கூறிவிட்டேன் இது அவருக்கு சரியாக கேட்கவில்லை போலும் இந்த விஷயம் அவருக்குத் தெரிந்து அடுத்த நாளே அவரது ஆபீஸில் இருந்து எனக்கு கால் வந்தது. அப்போது . விஜய் சார் என்னிடம் பேசினார், பேசிய போது முதலில் என்னிடம் மன்னிப்பு கேட்டார். ‘அப்போது நான் கொஞ்சம் பிஸியாக இருந்தேன் அதனால் உங்களுக்கு சரியாக என்னால் பதிலளிக்க முடியவில்லை ‘என்று கூறி எனக்கு ஷாக் கொடுத்தார் இவ்வாறு கூறியுள்ளார் அஞ்சனா.