சூப்பர் ஸ்டார்களுக்கெல்லாம் மேலானவர் விஜய்! மூத்த எம்.எல்.ஏ அதிரடி பேச்சு!

சூப்பர் ஸ்டார்களை காட்டிலும் இளைய தளபதி விஜய் தான் பெரியவர் என கேரள எம்.எல்.ஏ ஒருவர் கூறியுள்ளார்.


தென்னிந்தியாவின் பிரபல நடிகராக இருப்பவர் இளையதளபதி விஜய். இவருக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் எக்கச்சக்கம். இதேபோல் கேரளாவிலும் விஜய்க்கு அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர்.

 

விஜயின் படங்கள் தமிழகத்தில் எப்படி கொண்டாடப்படுகின்றனவோ அதேபோல் கேரளாவிலும் கொண்டாடப்படுகின்றன. இந்த நிலையில் நடிகர் விஜய்யை கேரள மாநில எம்எல்ஏ ஒருவர் புகழ்ந்துள்ளார்

 

கேரள காங்கிரஸ் எம் கட்சியை சேர்ந்தவர் பிசி ஜார்ஜ். கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பூஞ்சூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் அண்மையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

 

அப்போது இளைய தளபதி விஜய்யை அவர் புகழ்ந்து தள்ளினார்.

மலையாளத்தில் மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் சூப்பர் ஸ்டார்களாக திகழும் நிலையில், நடிகர் விஜய்யை சூப்பர் ஸ்டார் களுக்கெல்லாம் மேலானவர் என்று ஒரே போடாக போட்டு உள்ளார் பிசி ஜார்ஜ்

 

விஜய்க்கு அதிக அளவிலான கட் அவுட்களை வைத்து ஆயிரக்கணக்கிலான லிட்டர் பாலை ஊற்றி ரசிகர்கள் கொண்டாடுவதை தாம் பார்த்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இவரது கருத்து மோகன்லால் மற்றும் மம்முட்டியை தாக்குவது போல் இருப்பதால் அவர்களது ரசிகர்கள் பலரும் எம்எல்ஏ ஜார்ஜுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் 

முன்னதாக வயநாடு உதவி ஆட்சியர் உமேஷ் கேசவனும் நடிகர் விஜய் புகழ்ந்திருந்தார். மொழி புரியுதோ இல்லையோ குழந்தைகள் கூட விஜயின் படங்களை விரும்பி பார்ப்பதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.