கெஞ்சிய அட்லி! உருகிய விஜய்! நயன்தாரா சம்மதித்ததன் பின்னணி!

நடிகை நயன்தாராவை இயக்குனர் அட்லி கெஞ்சாத குறையாக கேட்டுக் கொண்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொள்ள வைத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.


நடிகை நயன்தாராவுக்கும் – விஜய்க்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான் என்பது திரையுலகை சேர்ந்த அனைவருக்கும் தெரியும். பொதுவாக முன்னணியில் உள்ள நடிகர்கள் முன்னணியில் உள்ள நடிகைகளை தங்களுக்கு ஜோடியாக்குவது தான் தமிழ் சினிமாவின் வழக்கம். ஆனால் இந்த வழக்கத்திற்கு மாறாக நடிகை நயன்தாராவை நடிகர் விஜய் ஒரு பொருட்டாகவே கருதியது இல்லை என்பது கடந்த காலம்.

   2003ம் ஆண்டு முதல் நடித்து வரும் நயன்தாரா 2004ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு வந்து அடுத்த ஆண்டே ரஜினிக்கு ஜோடியானார். இதன் பிறகு நயன்தாராவுடன் ஜோடி போட பலரும் காத்துக் கொண்டிருந்த நிலையில் விஜயோ, அவரை தனது சிவகாசி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆட வைத்து அனுப்பினார். ஆனாலும் கூட நயன்தாரா சூர்யா, சிம்பு, தனுஷ், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் முதலிடம் பிடித்தார்.

   இந்த நிலையில் மலையாளத்தில் வெளியான பாடிகார்ட் படத்தை தமிழில் காவலன் என விஜய் நடித்தார். மலையாளத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாராவை கழட்டிவிட்டு அசினை தனக்கு ஜோடியாக்கினார் விஜய். அதுமட்டும் இல்லாமல், குருவி படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தம் ஆனவர் நயன்தாரா. ஆனால் பிறகு நயன்தாராவை நீக்கிவிட்டு த்ரிஷாவை தனக்கு ஜோடியாக்கிக் கொண்டார் விஜய்.  பிறகு போனால் போகட்டும் என்கிற ரேஞ்சில் நயன்தாராவுடன் வில்லு படத்தில் ஜோடியாக நடிக்க விஜய் ஒப்புக் கொண்டார். அதுவும் கூட இயக்குனர் பிரபுதேவா கெஞ்சியதால் தான் விஜய் ஒப்புக் கொண்டதாக சொல்வார்கள். அதாவது நயன்தாரா முன்னணி நாயகியாகி சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு தான் விஜய் தன்னுடன் நடிக்க ஒப்புக் கொண்டார்.

   கடந்த 2005ம் ஆண்டு வில்லு படத்திற்கு பிறகு நயன்தாராவை விஜய் கண்டுகொள்ளவில்லை. ஆனால் நயன்தாரா அதன் பிறகு பீக்கிற்கு சென்று தற்போது உச்சத்தில் உள்ளார். இந்த நிலையில் தான் அட்லி, நயன்தாராவை விஜய் படத்தில் ஜோடியாக நடிக்க அணுகியுள்ளார். அதுவும் விஜய் கேட்டுக் கொண்டதால் தான் அட்லி நயன்தாராவை நேரில் சந்தித்து பேசியதாக சொல்லப்படுகிறது.   ஆனால் தற்போது தன் கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருப்பதாகவும், தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பதாகவும், விஜய் படத்தில் தற்போது நடிக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் அட்லிக்கு நயன்தாரா பதில் அளித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் இத்தனை நாட்கள் தன்னை கண்டுகொள்ளாத விஜய் தற்போது மட்டும் ஏன் அழைக்கிறார் என்றும் நயன்தாரா கேட்டுள்ளார். இதன் பிறகு வேறு வழியே இல்லாமல் விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நயன்தாராவிடம் உருகியதாகவும், கதைப்படி நீங்கள் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று நயன்தாராவிடம் கேட்டுக் கொண்டதாகவும்  சொல்லப்படுகிறது.

   இதனை தொடர்ந்தே போனால் போகட்டும் என்று நயன்தாரா விஜயுடன் நடிக்க கால்ஷீட் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதுவும் ஏகப்பட்ட கன்டிசனுடன் நயன்தாரா கால்ஷீட் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.