காமராஜர்! கலாம்! அப்புறம் சூர்யா! வைரலாகும் கல்விப் போராளி போஸ்டர்!

நடிகர் சூர்யாவை காமராஜர், அப்துல் கலாமுக்கு இணையாக அடித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.


அகரம் என அறக்கட்டளை தொடங்கி ஆண்டுதோறும் ஏழை மாணவ மாணவிகளின் கல்விக்கு உதவி செய்து வருபவர் சூர்யா. இதே போல் கல்வியில் சாதனை படைக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகையும் சூர்யா வழங்கி வருகிறார்.

அந்த வகையில் கடந்த வாரம் ஒரு விழாவில் பேசிய சூர்யா புதிய கல்விக் கொள்கையை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பாஜக மற்றும் அதிமுக தரப்பில கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதனை அடுத்து சூர்யாவுக்கு ஆதரவாக சீமான், கமல், சத்தியராஜ் உள்ளிட்டோர் குரல் கொடுத்தனர். ரஜினியும் கூட சூர்யா பேசியது மோடிக்கு கேட்டுவிட்டது. தானும் சூர்யா கருத்தை ஆதரிப்பதாக தெரிவித்திருந்தார்.

இதனால் நடிகர் சூர்யா கல்விக்காவலராக உருவகப்படுத்தப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறார். இதனால் உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள் சிலர் சூர்யாவை காமராஜர் மற்றும் கலாமின் வழிவந்தவர் போல் சித்தரித்து போஸ்டர் அடித்துள்ளனர்.

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதே சமயம் இதனை சிலர் விமர்சிக்கவும் செய்து வருகின்றனர்.