தர்காவில் வழிபாடு! இஸ்லாத்தை தழுவினாரா சூர்யா? அதிர்ச்சியில் சிவக்குமார்!

நடிகர் சூர்யா தர்கா ஒன்றில் வழிபாடு நடத்துவது போன்ற புகைப்படம் வெளியானதால் அவர் இஸ்லாம் மதத்தை தழுவிவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.


தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் சூர்யா.  இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டார். அதைத் தொடர்ந்து கே.வி ஆனந்த் இயக்கும் "காப்பான்" என்ற படத்திலும் நடித்து முடித்துவிட்டார்.

அதற்கு அடுத்ததாக, "இறுதிசுற்று" திரைப்படத்தை இயக்கிய சுதா கங்கோரா இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது அந்த மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அஜ்மீர் தர்கா ஒன்றில் இயக்குனர் சுதா கங்கோராவுடன் சென்று வழிபாடு செய்தார் சூர்யா.

தலையில் வழிபாடு நடத்தும் பொருளுடன் சூர்யா இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. இதனால் அவர் இஸ்லாம் மதத்தை தழுவிவிட்டதாக ஒரு தரப்பினர் தகவல் பரப்பி வருகின்றனர். இதனை அறிந்து சூர்யாவின் தந்தை சிவக்குமார் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.