தமிழகத்தின் முதல்வராக தகுதி படைத்த ஒரே சினிமா கலைஞன் சூர்யா மட்டும்தான்! ரஜினியும் கமலும் ஓடிப் போகலாம்!

கங்கையும் காவிரியும் இணைக்கப்பட்டால் 1 கோடி ரூபாய் தருவதாக அறிவித்திருக்கும் ரஜினிக்கு, அப்படியொன்று நடக்காது என்பது தெரியும்.


அதேபோன்று பிக்பாஸ் மூலம் சமூகத்திற்கு பெரும் நன்மை செய்துவரும் கமல்ஹாசனுக்கு பா.ஜ.க.வின் கொள்கையைத் தாண்டி எதுவும் தெரியாது. முதன்முதலாக ஒரு சினிமா கலைஞனாக, அகரம் பவுண்டேஷன் தலைவராக அறியப்படும் சூர்யா, மாணவர்களின் நிஜமான பிரச்னைகளை அக்கறையுடன் பேசியிருக்கிறார். மாணவர்களுடன் நெருங்கிப் பழகும் சூழல் வாய்த்த இவரைப் போன்றவர்கள்தான் அரசியலில் நுழைந்து புரட்சியை ஏற்படுத்த முடியும்.

அவர் கேட்டிருக்கும் ஒவ்வொரு கேள்வியும் ஆயிரம் மில்லியன் மதிப்புள்ளது அப்படி என்ன கேட்டார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். முப்பது கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்வி கொள்கையை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம்? .மூன்று வயது குழந்தையால் மூன்று மொழி படிக்க முடியுமா?  நாட்டில் 1848 பள்ளிகள் மூடப்படப்போகிறதே இதற்கு பதில் என்ன?

கல்வியில் சிறந்த நாடுகளில் 8ம் வகுப்பு வரை எந்த தேர்வும் இல்லை என்கிற நிலையில் 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு என்பது எப்படிச் சிறந்த கல்வியாகும்?  நுழைவு தேர்வு, பொதுத் தேர்வு, தகுதி தேர்வு, நீட் தேர்வு என்று மாணவர்கள் தொடர்ந்து தேர்வை எழுதிக் கொண்டிருந்தால் அவர்கள் வாழ்க்கையை படிப்பது எப்போது?

ஒரு லட்சத்து 80 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் ஒருவர் மட்டுமே பாஸ் என்றால் இதை எப்படி பார்ப்பது?  ஐம்பது ஆயிரம் கல்லூரிகள் 12 ஆயிரமாக குறைக்கப்படுவதும், கோச்சிங் செண்டர்கள் அதிகரிப்பதும்தான் புதிய கல்வி கொள்கையா?

சுமார் 80 லட்சம் ஆசிரியர்களை கொண்ட இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை ஒரேயொரு ஆசிரியர் அமைப்பும், ஒரேயொரு மாணவர் அமைப்பும் சேர்ந்து தீர்மானிப்பது எந்த விதத்தில் நியாயம்?  விதவிதமான கல்வி முறைகளை வைத்துக் கொண்டு தேர்வு மட்டும் பொதுவானது என்பது எப்படிச் சரியாகும்?

எதிர்கால தலைமுறையின் தலையெழுத்து எழுதப்படும் நேரத்தில் நாம் ஏன் இன்னும் விழிப்படையாமல் இருக்கிறோமே ஏன்? சபாஷ் சூர்யா… இதே மக்கள் அன்புடன் அரசியலுக்கு வாருங்கள், சாக்கடையை தூய்மைப் படுத்துங்கள்.