வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கிய சூர்யா ரசிகர்கள்! உண்மையில் இவர்கள் தான் காப்பான்..!

திருவள்ளூர் மாவட்டத்தில் நடிகர் சூர்யா ரசிகர் மன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் வாகன ஓட்டிகளுக்கு சுமார் 150 தலைக்கவசங்கள் இலவசமாக வழங்கியுள்ளனர்.


இந்தியா முழுவதிலும் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் தலைகவசம் அணிந்து தான் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும்.

இந்நிலையில் இந்த மாதம் முதல் வசூலிக்கப்படும் அபராத தொகையை உயர்த்தி புதிய அபராத கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு கடமையாக விதிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் கட்டவுட் சரிந்து விழுந்ததில் கல்லூரி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து பல்வேறு சினிமா பிரபலங்கள் தங்கள் ரசிகர்கள் யாரும் கட்டவுட் வைக்க வேண்டாம் என தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கும் இனிமேல் யாரும் சினிமா பட நடிகைகளுக்கு தட்டிகள் வைக்க வேண்டாம் எனவும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அந்த பணத்தில் செய்ய வேண்டும் எனவும் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் சூர்யா ரசிகர் மன்றத்தில் இருந்து சுமார் 150 இலவசங்கள் ஹெல்மெட்டுகளை வாகன ஓட்டிகளுக்கு வழங்கியுள்ளனர். இவர்கள் தலைமையாக சூர்யா ரசிகர் மன்ற தலைவர் எல் டி ராஜ்குமார் இருந்து இந்த சேவையை தொடங்கி வைத்தார்.

வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கிய சூர்யா ரசிகர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.