நடிகையுடன் குடி, கும்மாளத்துடன் காரில் அதிவேகமாக சென்ற நடிகர்! சாலையை கடந்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

தெலுங்கு நடிகர் சுதாகர் தெலுங்கில் தற்போது வளர்ந்து வரும் நடிகராவார். தெலுங்கு மொழியில் பியூட்டிஃபுல் என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றவர் இவர்.


கடந்த சனிக்கிழமை இவர் ஹைதராபாத்தில் இருந்து குண்டூருக்கு தனது காரின் மூலம் பயணம் செய்து கொண்டிருந்தார். காரில் அவருடன் நடிகை ஒருவர் இருந்ததாகவும் கூறுகிறார்கள். இருவருமே போதையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த காரை அவரது டிரைவர் ஓட்டிச் சென்றிருக்கிறார் இந்த கார் மங்களகிரி அருகே செல்லும்போது ஒரு பெண்ணின் மீது திடீரென மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளனர். அந்த பெண் அப்போது தனது வயலுக்கு தண்ணீர் வைத்துக் கொண்டிருந்தார் என செய்திகள் வந்துள்ளது.

 இந்த விபத்தால் அந்த காரில் பயணம் செய்த சுதாகருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது .உடனடியாக அங்கு இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் இவர்கள் விபத்தை ஏற்படுத்திய பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது இதனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.