பிரபல நடிகரிடம் நடிகைகள் 2 பேர் சேர்ந்து செய்த தகாத செயல்! பிறகு நேர்ந்த விபரீதம்!

நடிகர் ஒருவரை பிளாக்மெயில் செய்து இரு நடிகைகள் பணம் கரந்த சம்பவம் மராத்தி திரையுலகில் நடந்துள்ளது.


திரையுலகில் பணிபுரியும் பெண்களை உச்ச நட்சத்திரங்கள் தங்கள் ஆசைக்கு இணங்க வற்புறுத்தும் சம்பவங்கள் நிறையவே நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இவற்றையெல்லாம் அடக்குவதற்கு மீடூ என்ற ஒரு இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் அது வந்த வேகத்தில் காணாமல் போய்விட்டது.

அதற்கு காரணம் சில பெண்கள் உண்மையிலேயே புகார் கூறினாலும் சில பெண்கள் அதை தவறாக பயன்படுத்தியது அப்பட்டமாக தெரிந்தது. இதற்கு சான்றாக  ஒரு சம்பவம் மராத்தி சினிமாவில் நடந்துள்ளது. நடிகர் சுபாஷ் யாதவை உடன் நடித்த இரு நடிகைகள் பிளாக்மெயில் செய்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. 

ரோகினி மனே, மற்றும் சாரா ஷ்ரவன் ஆகிய இருவரும் அந்த நடிகரிடம் வாக்குவாதம் செய்வது போன்ற வீடியோவை பதிவு செய்து கொண்டு அதை வெளியிட்டு விடுவதாக மிரட்டி 15 லட்சம் ரூபாய் வரை பணத்தை கறந்து உள்ளனர். தனது குடும்ப அந்தஸ்து கருதி அந்த நடிகர் இதை வெளியில் சொல்லாமல் இருந்து உள்ளார்.

ஆனால் தொந்தரவு அதிகரிக்கவே அவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அந்த இரு நடிகைகளையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அந்தப் பெண்களுக்கு உதவியாக இருந்த சில போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.