சீமானுக்கு நண்பனாக இருந்ததை எண்ணி இப்போது வெட்கப்படுகிறேன்..! காரணம் இது தான்..! மாதவன் பளார் பேட்டி!

சீமானின் அரசியல் பிரவேசம் தனக்கு பிடிக்கவில்லை என்றும், அவரது அரசியல் பேச்சுக்கள் அவர்மீது வெறுப்பைத்தான் ஏற்படுத்துகிறது என்றும் நடிகர் மாதவன் பரபரப்பாக குற்றம்சாட்டியுள்ளார்.


தமிழ் மற்றும் இந்தி திரையுலகிலும், விளம்பர மாடலாகவும் நடித்தவர் மாதவன். இவர் நடித்த அலைபாயுதே, தம்பி, மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டால் கமல்ஹாசனுடன் அன்பே சிவம் ஆகிய படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது அவர் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என 5 மொழிகளில் ராக்கெட்ரி – நம்பி விளைவு (Rocketry – The Nambi Effect) என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அதில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்படுகிறது. இதில் 75 வயது முதியவராக நடிக்கிறார் மாதவன். அவருக்கு ஜோடி சிம்ரன். தற்போது மாதவன் அளித்த பேட்டியில் சீமானிடம் பணி புரிவது மிக கடினம், தம்பி படத்தில் வரும் முதல் சண்டைக்காட்சி குப்பை மேட்டில் எடுக்கப்பட்டது, அப்போது தூசிகள், அழுக்குகள் எல்லாம் என் மீது வந்து விழும், ஆனால் அதில் என்னை கண் சிமிட்டாமல் நடிக்க சொன்னார் என்று கூறினார்.

மேலும் சீமானின் அரசியல் பிரவேசம் தனக்கு பிடிக்கவில்லை என்றும் அவரைப் பேற்றி கேட்டால் Am Sorry, No Comments என்றுதான் சொல்ல தோன்றுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவருடைய அரசியல் அரசியல் பேச்சுக்கள் அவர் மீது வெறுப்பைத்தான் ஏற்படுத்துகிறது என்று பேட்டி அளித்துள்ளார்.