சிவாஜி குடும்பத்துக்கா இந்த நிலை? பூர்வீக வீட்டை விற்பனை செய்த பிரபு - ராம்குமார்? ஆதங்கப்படும் பிரபலங்கள்!

சென்னையில் நடிகர் சிவாஜி கணேசன் ஆரம்பத்தில் வசித்த வீடு விற்பனை செய்வதற்கு திரையுலகினர் பலர் வேதனை தெரிவித்துள்ளனர்.


சென்னை ராயப்பேட்டை பெசன்ட் சாலை எண் 7 என்ற முகவரியில் ஆரம்பக் காலத்தில் நடிகர் சிவாஜிகணேசன் வசித்து வந்தார். ராம்குமார், சாந்தி, பிரபு ஆகியோர் பிறந்ததும் இந்த வீட்டில்தான். பிள்ளைகள் வளர்ந்த உடன் தி.நகருக்கு குடிபெயர்ந்தது சிவாஜி குடும்பம். பின்னர் இந்த வீடு 'சிவாஜி புரொடக்‌ஷன்' அலுவலகமாகச் செயல்பட்டு வந்தது.

தற்போது இந்த இடம் சிவாஜி குடும்பத்திடமிருந்து விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரு காலத்தில் கோடம்பாக்கத்தை போலவே அந்தக் காலத்தில் சினிமாவுடன் தொடர்பு இருந்தது சிவாஜியின் வீடு. டி.கே.சண்முகம், ரெட் ராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் நாடகக் கம்பெனிகள் இதே ஏரியாவில்தான் இருந்தன.

திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன், எம்.என்.ராஜம், எம்.என்.நம்பியார், ஜி.ராமநாதன், பி.புல்லையான்னு ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் இந்தப் பகுதியில் வசித்தனர். 'புதிய பறவை' படம் படப்பிடிப்பிக்கூ இந்த வீட்டில் நடத்தப்பட்டது. 'சந்திரமுகி' படத்தின் வேலைகள் இங்குதான் நடந்தன. சிவாஜி புரொடக்‌ஷன் படங்கள் தயாரிக்கறதை நிறுத்திய பிறகு இந்த சொத்து விற்கப்பட்டுள்ளது. 'சிவாஜி வாழ்ந்த வீடு என்பதற்காகவாவது அப்படியே பராமரிச்சிருக்கலாம் என்பது சினிமாத்துறையினரின் கருத்து.