சிம்பு படம் இனிமே ஒன்று கூட ரிலீஸ் ஆகாது! தயாரிப்பாளர் சங்கம் முடிவு! ஏன் தெரியுமா?

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் எந்த படத்தையும் வெளியிட ஒத்துழைப்பது இல்லை என்று தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக முடிவெடுத்துள்ளது.


2010ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படம் தான் அவருக்கு கடைசியாக வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு கடந்த ஆண்டு வெளியான செக்கச் சிவந்த வானம் வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு முன்பு வெளியானை அத்தனை சிம்பு படங்களும் படு தோல்வி. அதிலும் ஒஸ்தி, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் கடும் நஷ்டத்தை கொடுத்தது.

   இவற்றுக்கு எல்லாம் உச்சமாக அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் விநியோகஸ்தரை நடுத்தெருவுக்கு கொண்டுவந்தது. இதனால் சிலம்பரசனுக்கு எதிராக அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு சிம்பு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும், டப்பிங் பேச வராமல் தனது வீட்டு பாத்ரூமில் வைத்து டப்பிங் பேசி படத்தை சிதைத்துவிட்டதாகவும் கூறி கண் கலங்கினார்.

  மேலும் படத்திற்கு சிம்பு இழுத்து வைத்த கூடுதல் செலவுகளையும் மைக்கேல் ராயப்பப் பட்டியலிட்டார். இந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்றது. ஆனால் தயாரிப்பாளர் சங்க விசாரணைக்கு வர முடியாது என்று சிம்பு கூறிவிட்டார். ஓராண்டாக முயன்றும் விசாரணைக்கு வரவே முடியாது என்று திட்டவட்டமாக கூறி வருகிறார் சிம்பு. அதாவது படத்திற்கு ஏற்பட்ட இழப்பிற்கு சிம்பு தான் காரணம், அதற்கு அவரிடம் நஷ்ட ஈடு வாங்கித்தர வேண்டும் என்று தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கோரி வருகிறார்.

   இது குறித்து விசாரித்து முடிவெடுக்கலாம் என்றால் சிம்பு தயாரிப்பாளர் சங்கத்திற்கு வர முடியாது, நீங்கள் கட்டப்பஞ்சாயத்து செய்கிறிர்கள் என்று கூறி வருகிறார். இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த தயாரிப்பாளர் சங்கம் இனி சிம்பு நடித்துள்ள படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என்று முடிவெடுத்துள்ளது. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு சிம்பு தர வேண்டிய பணத்தை கொடுக்கவில்லை என்றால் அவருக்கு ரெட் கார்டு போடுவது என்றும் முடிவெடுத்துள்ளது.

  மேலும் சிம்புவை இனி யாரும் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து தயாரிப்பாளர்களுக்கு வாய் மொழி உத்தரவு சென்றுள்ளது. இதனிடையே சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவா தான் வருவேன் படம் விரைவில் வெளியாக உள்ளது. ஆனால் மைக்கேல் ராயப்பன் பிரச்சனையை சுட்டிக்காட்டி அந்த படத்திற்கு தியேட்டர்களை ஒதுக்க கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் கடிதம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.