எடப்பாடியை நினைச்சு வெட்கப்படுறேன்! வெளுத்துவாங்கிய நடிகர் சித்தார்த்! ரஜினி, கமல் எங்கேப்பா போனீங்க!

சினிமாவில் நடித்தோமோ, போனோமா என்று இல்லாமல் அவ்வப்போது நாட்டில் நிகழும் சமூக அவலங்களுக்கு எதிராக தன்னுடைய குரலை உரக்க எழுப்புபவர் நடிகர் சித்தார்த்.


அந்த வகையில் பா.ஜ.க. நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார். இந்தியாவை மதவெறிக்குள் தள்ளிவிடும் அபாயமும், இந்தியாவை இந்து நாடாக்கவும்தான் இந்த சட்டம் கொண்டுவரப் படுகிறது என்று சமூக ஆர்வலர்கள் கொந்தளித்து வருகிறார்கள். மத்திய அரசு என்ன சட்டம் கொண்டுவந்தாலும் கண்மூடிக் கொண்டு ஆதரித்து வருகிறது, எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசு.

அதனால் ஏற்பட்டுள்ள கோபத்தில், எனது மாநிலத்தை எடப்பாடி பழனிசாமி பிரதிநிதித்துவப்படுத்துவதை நினைத்து வெட்கப்படுகிறேன். ஜெயலலிதா இருந்திருந்தால் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்திருக்க மாட்டார்’ என்று நடிகர் சித்தார்த் ட்வீட் செய்திருக்கிறார்.

நீட், ஜி.எஸ்.டி. முதலான மத்திய அரசு திட்டங்களுக்கு ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர் என்பதால் இந்தப் பதிவை போட்டிருக்கிறார் சித்தார்த். 2021ம் ஆண்டு நேரடியாக ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லும் சினிமா நடிகர்கள் இதற்கு வாய் திறக்காத நிலையில், சித்தார்த் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.