2 முறை ஓகே சொல்லி ஒத்துக் கொண்ட நயன்தாரா! கைமாறாக சிவகார்த்திகேயன் செய்த செயல்!

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர்.


தற்போது வரை 16 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தனக்கென ஒரு மிகப்பெரிய மார்க்கெட்டை பிடித்து வைத்துள்ளார்.

தற்போது அவரது 17 வது படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க லைக்கா நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த படத்திற்கான அறிவிப்பை நேற்று லைக்கா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது. இந்த படத்தினை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் மேலும் அனிருத் இசை அமைக்கிறார்.

வரும் ஜூலை 2019 இல் படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது. 2020ஆம் ஆண்டு படம் திரைக்கு வர உள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. படத்தின் டெக்னீஷியன்கள் குழுவை இன்னும் அறிவிக்கவில்லை. 

அதே சமயம் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்க உள்ளார். ஏற்கனவே இரண்டு முறை சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார். அதற்கு கைமாறாக நயன்தாரா காதலனுக்கு ஒரு படம் சிவகார்த்திகேயன் பண்ணிக் கொடுக்க உள்ளதாக கூறுகிறார்கள்.