ரஜினி மகள்! கமல் மகள்கள் வரிசையில் தனுசுடன் இணையும் இன்னொரு பிரபல நடிகரின் மகள்!

இந்தியில் முக்கோண காதல் திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ் திரையுலகில் மிகப் பிரபலமான நட்சத்திரமாக அறியப்படுபவர் நடிகர் தனுஷ். அவர் கடைசியாக நடித்த வடசென்னை திரைப்படம் தமிழில் மிகப் பெரிய அளவில் ஹிட்டானது. அவர் இந்தியில் முதன் முதலில் கால் பதித்த திரைப்படம் ராஞ்சனா.

அரசியலும் காதலும் கலந்த திரைப் படமான இது இந்தியில் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. தமிழில் பெரிய அளவில் பேசப்படவில்லை. இந்தப்படத்தை இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் அவர் நடிகர் தனுஷை மீண்டும் இந்தியில் இயக்க உள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாரா அலி கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்திய உள்ள வேளையில் மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

அதாவது இந்த படத்தில் நடிப்பதற்கு ஹிருத்திக் ரோஷன் அணுகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்தப்படம் முக்கோண காதல் களத்தில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது ‌.

இந்த இயக்குனர் கடைசியாக ஷாருக் கானை வைத்து ஜீரோ என்ற படத்தை இயக்கி இருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இந்த சூழலில் தற்போது முக்கோண காதல் கதையை அவர் கையில் எடுத்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே தனுஷ் ரஜியின் மூத்த மகளை திருமணம் செய்து கொண்டவர். இளைய மகள் இயக்கத்தில் விஐபி 2 படத்தில் நடித்துள்ளார். இதே போல் கமல் மகள் ஸ்ருதியுடன் 3 படத்தில் நடித்த கமல் அக்சராவுடன் இணைந்து இந்தி படத்தில் நடித்தார். அந்த வரிசையில் தற்போது சயப் அலி கான் மகளுடன் சாராவுடன் இணைந்து நடிக்க உள்ளார்.