நடிகர் சரத்பாபு இவ்வளவு கேவலமானவரா? முன்னாள் காதலி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

நான் பரம்பரை பணக்காரன்; மற்றவர்களின் சொத்து மீது ஆசை கொண்டவன் இல்லை,’’ என்று நடிகர் சரத்பாபு கூறியுள்ளார்.


தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில், முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் சரத்பாபு. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து, இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்

 

இந்நிலையில், நடிகர் சரத்பாபுவின் முன்னாள் காதலி ரமா பிரபு என்பவர், சர்ச்சைக்குரிய புகார் ஒன்றை கூறியுள்ளார். சினிமா நடிகையான ரமா பிரபு, கடந்த 1980களில், சரத் பாபுவை காதலித்தது மட்டுமின்றி, அவருடன் சேர்ந்து, திருமணம் செய்யாமலேயே சில காலத்திற்கு தனிக்குடித்தனமும் நடத்தியுள்ளார்.

 

எனினும், கருத்து வேறுபாடு காரணமாக, இவர்கள் பிரிந்துவிட்டனர். அதன்பிறகு, நடிகர் சரத்பாபு, பிரபல நடிகரான மறைந்த நம்பியாரின் மகளை திருமணம் செய்துகொண்டார்

 

இதெல்லாம் நடந்து 30 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது ரமா பிரபு, ‘’சரத்பாபு எனது சொத்தை அபகரித்துக் கொண்டார். காதல் என்ற பெயரில் என்னை ஏமாற்றி, மோசடி செய்துவிட்டார்,’’ என்று கூறியுள்ளார்

 

இது சினிமா வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ரமா பிரபுவின் குற்றச்சாட்டுக்கு, சரத்பாபு பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘’நான் பிறக்கும்போதே பரம்பரை பணக்காரன். பாலச்சந்தர் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

 

ஏராளமான படங்களில் நடித்து பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளேன். ரமா பிரபு கூறுவதுபோல, நான் மற்றவர்களின் சொத்து மீது ஆசை கொண்டவன் இல்ல. ரமாவை காதலித்து, தனிக்குடித்தனம் நடத்தியபோது எனக்கு சின்ன வயது.

 

என்னைவிட அவர் வயதில் மூத்தவர். இதனால்தான், திருமணம் செய்துகொள்ள முடியாமல் பிரிய நேரிட்டது. நாங்கள் காதலித்த காலத்தில், எனது பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்று, ரமாவுக்காக, சென்னையில் நான் வீடு வாங்கிக் கொடுத்தேன்.

 

மேலும், அவரது வீட்டையும் சில முறை புதுப்பித்துக் கொடுத்துள்ளேன். உண்மையில், என்னை ஏமாற்றியது ரமாதான்,’’ என்று சரத்பாபு சூடான பதிலடி கொடுத்துள்ளார்.