மு.க ஸ்டாலினுடன் பிரபல நடிகரின் மகள் சந்திப்பு! விரைவில் திமுகவில் இணைகிறார்!

பிரபல நடிகரின் மகள் திவ்யா திமுக.,வில் இணைய உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.


சத்யராஜின் மகள் திவ்யா, சமீபத்தில் பிரதமர் மோடிக்கு, மருந்து கம்பெனிகளில் நடக்கும் விதிமீறல்கள் பற்றியும், அதனை தடுக்க வேண்டிய அவசியம் பற்றியும் கடிதம் எழுதி சர்ச்சையில் சிக்கினார். இதன்பேரில், பல்வேறு தரப்பில் அவர் மீது அதிருப்திகளும், ஆதரவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, திவ்யா, அமெரிக்காவில் இருந்து சென்னை வந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு பற்றி கேட்டபோது, அவர் குடும்ப நண்பர் என்ற முறையில் மு.க.ஸ்டாலினை நட்புரீதியாக சந்தித்துப் பேசியதாகக் கூறினார். 

இந்நிலையில் அவர், திமுக.,வில் சேரப் போவதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில், அவர் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. சத்யராஜின் மகள் அவ்வப்போது சமூகம் சார்ந்த விஷயங்களுக்காக குரல் கொடுப்பது குறிப்பிடத்தக்கது.