என் மகள் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டா! பிரபல நடிகரின் வெளிப்படையான பேட்டி!

தன்னுடைய மகள் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று பிரபல நடிகர் ஒருவர் வெளிப்படையாக பேட்டி கொடுத்துள்ளார்.


நடிகர் சயீப் அலிகான் பாலிவுட்டில் மிக முக்கியமான நடிகர் ஆவார். இவர் கடந்த 1992-ம் ஆண்டு முதல் பாலிவுட் திரையுலகில் முடிசூடா மன்னனாக இருந்து வருகிறார். தேசிய விருது பெற்ற இவர் நடித்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது.  இவருக்கும் அம்ரிதா சிங் என்ற நடிகைக்கும் கடந்த 1991ஆம் ஆண்டு திருமணமானது.

இந்த திருமணத்தின் மூலம் இவருக்கு சாரா அலி கான் என்ற ஒரு மகள் உள்ளார். அந்த மகளுக்கு தற்போது 23 வயதாகிறது. இவர் நடித்து வெளியான இரண்டு படங்களுமே ஹிட்.  இந்நிலையில் சைப் அலி கான் தனது தயாரிப்பு நிறுவனத் தின் மூலம் Jawani Jaaneman என்ற ஒரு திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த படத்தில் முதலில் சாரா அலி கான் நடிப்பதாக இருந்தது. தற்போது இந்த செய்திகளை மறுத்துள்ளார் சைப் அலிகான். அவருக்குப் பதிலாக பழம்பெரும் நடிகை பூஜா பேடியின் மகள் ஆலியாவை நடிக்க வைப்பதாக தெரிகிறது. சயீப் அலிகான் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் தன் மகளை நடிக்க வைக்காதா இந்த செய்தி தற்போது பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கேட்ட போது தனது மகள் அந்த கேரக்டருக்கு சரிவரமாட்டார் என்பதால் தான் அவரை நடிக்கவைக்கவில்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.