பாகுபலி ராணாவுக்கு என்ன ஆனது? ஆஜானுபாகுவாக இருந்தவர் எலும்பும் தோலுமானதன் பகீர் பின்னணி!

நடிகர் ராணா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவர் தற்போது தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.


இவருக்கு தற்போது 34 வயதாகிறது. கடந்த 2010ல் இருந்து படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் ஆரம்பம், பாகுபலி, இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், என்னை நோக்கி பாயும் தோட்டா என பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பாகுபலி படத்தில் ஆஜானுபாகுவாக, பிரம்மாண்டமாக இருந்த ராணா தற்போது எலும்பும் தோலுமாக ஆகியுள்ளார். தனது எடையை வெகுவாக குறைத்து உள்ள இவர் எதற்காக இப்படி செய்தார் என்று தெரியவில்லை. இவ்வாறு புலம்பிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போது ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.

அதாவது விரக பார்வதம் 1992 என்ற ஒரு படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறாராம் ராணா. அதற்காகத்தான் இவ்வளவு உடம்பை குறைத்துள்ளாராம் .இந்த படத்தில் சாய் பல்லவி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். காதல் மற்றும் ஆக்சன் கலந்த இந்த படம் இவருக்கு மிக.ப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அவர் எதிர் பார்த்து வருகிறார் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி தற்போது மூன்று மாதமாக ஆந்திராவில் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இப்படி ராணா தரப்பில் கூறினாலும் அவருக்கு உடலில் ஏதோ பாதிப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் கூட ராணா சிகிச்சைக்காக வெளிநாடு சென்று வந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த பாதிப்பு தீவிரமானதன் எதிரொலியாகவே தற்போது ராணாவின் உடல் இப்படி எலும்பும் தோலுமாகியுள்ளதாகவும் கூறுகிறார்கள்.