பிரபல நடிகரின் திரைப்பட வெற்றிக்கு திருப்பதி மலையை முட்டி போட்டு ஏறிய விபரீத ரசிகர்! யார் படம் தெரியுமா?

தனக்குப் பிடித்த நடிகர்கள் நடித்துள்ள சினிமா படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக, ரசிகர் ஒருவர் மேற்கொண்ட கடுமையான வழிபாடு தெலுங்கு சினிமா உலகில் வைரலாகி வருகிறது.


தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக, ராம் போதினேனி  உள்ளார். அவரது படங்களுக்கு இளைஞர்களிடம் அதிக வரவேற்பு நிலவும் சூழலில், அவர் புதியதாக நடித்துள்ள ஐஸ்மார்ட் சங்கர் என்ற படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதன் டிரெய்லர் சில நாள் முன்பாக, வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படம் பிரமாண்ட வெற்றி பெற வேண்டி ரசிகர் ஒருவர் முட்டிக்காலில், திருப்பதி மலையை ஏறி சுவாமி தரிசனம் செய்துள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

இதனை சந்தீப் குமார் என்ற அந்த ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, அதற்கு பதில் அளித்து நடிகர் ராம் பொத்தினேனி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதுபோன்ற உணர்ச்சிகரமான சம்பவங்களை செய்ய வேண்டாம் என்றும், ரசிகர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை பார்த்தால் கண்ணீர் வருகிறது என்றும், அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல, ஐஸ்மார்ட் சங்கர் படத்தின் தயாரிப்பாளரும், நடிகையுமான சார்மி கவுர், இதுபற்றி பாராட்டு தெரிவித்துள்ளார்.  அவர் கூறுகையில், இதுபோன்ற நேர்த்திக்கடன் செய்யும் ரசிகர்களின் அன்புக்கு நன்றி செலுத்தவே முடியாது என்றார்.