ரஜினி மிகவும் கவலையில் இருக்கிறார்..! மனைவி லதா வெளியிட்ட தகவல்!

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுஜித்த தவறி விழுந்த தகவல் அறிந்த ரஜினிகாந்த் கவலையில் உள்ளதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுஜித் விளையாடும்போது அங்கு மூடப்படாத இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். குழந்தை தவறி விழுந்து 2 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் எப்படியாவது மீட்க வேண்டும் என தமிழக அரசு பல தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மதங்களை கடந்து அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இது குறித்து லதா ரஜினிகாந்த் பேட்டியில், ஆழ்துளை கிணறுகளை மூட ஒரு நெறிமுறைகளை வகுக்கவேண்டும். இது போன்றதொரு நிலை இனி தொடரக்கூடாது என பேசினார்.

நாம் அனைவரும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இதற்கு முழுமையான தீர்வுகள் காணப்படவேண்டும். இது தொடர்ந்தால் குழந்தைகள் நம்மை மதிப்பதையே நிறுத்திவிடுவார்கள். அஜாக்கிரதையான சமூகத்தில் வாழ்ந்து வருவதாக குற்றம்சாட்டிய லதா ரஜினிகாந்த் குழந்தைகளுக்காக தேசிய அளவில் ஒரு அமைப்பை மத்திய மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அனைத்து இடங்களிலும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். ஆழ்துளை கிணறு மட்டுமல்லாமல், வேறு சில விபத்துகளும் அன்றாடம் நடந்துக் கொண்டிருக்கின்றன. பல சம்பவங்கள் வெளியே வராமல் போகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க ஒரு பொதுவான தொடர்பு தேவைப்படுகிறது. அதை ஏற்படுத்ததுவதற்காக மாநில அமைப்பு ஒன்றை உருவாக்க தமிழக அரசை தொடர்பு கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுவன் சுஜித் சம்பவம் குறித்து கேள்விபட்ட நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த கவலையில் இருப்பதாகவும், குழந்தை விரைவில் மீண்டு வரவேண்டும் என பிரார்திப்பதாகவும் தெரிவித்தார்.