9 மாத கர்ப்பிணி ரசிகையை நேரில் அழைத்து நெகிழ வைத்த ரஜினி! கண்கலங்கிய கணவன்!

நடிகர் ரஜினிகாந்த் நிறைமாத கர்ப்பினியான தனது ரசிகைக்கு வளையல் அணிவித்து ஆசி வழங்கி அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார். இந்த சம்பத்தினால் தம்பதியினர் மிகவும் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.


நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பாட்ஷா படத்தில் வரும் பாட்டில் வரும் இந்த வரிகள்” நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா - உன் பிள்ளைக் கொரு பேரு வச்சும் தாரேம்மா” என்ற படலுக்கு ஏற்ப விக்னேஷ் - ஜெகதீஸ்வரி என்ற தம்பதியரை நேரில் சென்று நிறைமாத கர்ப்பினிக்கு வளையல் அணிவித்த ஆசி வழங்கிய நடிகர் ரஜினிகாந்த். 

சென்னை திருவல்லிக்கேனியை சேர்ந்த ராகவா விக்னேஷ் - ஜெகதீஸ்வரி தம்பதியினர் ரஜினியின் மிகவும் திவிர ரசிகர்கள். இந்நிலையில் ராகவா விக்னேஷ் கர்ப்பமாக இருந்த மனைவியிடம், அவரது ஆசை குறித்து கேட்டுள்ளார். அதற்கு ரஜினியை பார்க்க வேண்டும் என ஜெகதீஸ்வரி கூறியதால், 4வது மாதம் முதலே ரஜினியை பார்ப்பதற்கு நேரம் கேட்க ராகவா விக்னேஷ் முயன்றுள்ளார்.

பின்னர், இதனை அறிந்த நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய படப்பிடிப்பு நடந்து வரும் தளத்துக்கு தம்பதியரை வரவழைத்து விக்னேஷ் - ஜெகதீஸ்வரி சந்தித்துள்ளார். மேலும், நிறைமாத கர்ப்பிணியான ஜெகதீஸ்வரிக்கு வளையல் அணிவித்து ஆசி வழங்கியுள்ளார். இந்த சம்பவத்தினால் மிகவும் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்கள் தம்பதினர்கள்.

மேலும், இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.