ரஜினியிடம் யாருக்கும் கிடைக்காத அரவணைப்பு அது..! நெகிழ்ந்த துபாய் தமிழச்சி! யார் தெரியுமா?

துபாயில் ரஜினி பெயரில் ஓட்டல் நடத்தி வரும் பெண்ணின் கோரிக்கையை ஏற்று அவருடன் நடிகர் ரஜினிகாந்த் எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வெளியாகி உள்ளது.


ஆந்திராவை சேர்ந்த சவிதா ஜெயராமன் என்ற பெண் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள ரஜினிகாந்த் பெயருக்கு பெருமை சேர்க்கும் வகையில் ரஜினிசம் என்ற பெயரில் துபாயில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் நடிகர் ரஜினிகாந்த்தை சந்திக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆந்திரா மாநிலம் ஸ்ரீரடி சாய்பாப கோயிலுக்கு ரஜினிகாந்த் வந்திருந்தபோது நேர்காணலில் அவரை சந்தித்தார் ரசிகை.

ஆனால் அவருடன் புகைப்படம் எடுக்க மறந்துவிட்டதாகவும், புகைப்படம் எடுத்துக்கொள்ள சந்திக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார் சவீதா. இதை ஏற்றுக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த் ரசிகை சவீதா ஜெயராமனை தனது வீட்டிற்கு அழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் துபாயில் சவீதா நடத்திவரும் ரஜினிசம் ஓட்டலில் நடிகர் ரஜினிகாந்தின் ஏகப்பட்ட புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.