அடுத்த முதலமைச்சர் யார்? ரஜினி மேடையில் தெறிக்க விட்ட திமுக எம்பி திருச்சி சிவா!

சென்னை தி.நகரில் 'புறநானூறு புதிய வரிசை வகை' என்ற பேரில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.


இதில் திருச்சி சிவா, எம் .பி வெங்கடேசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். விழாவில் கலந்து கொண்டு பேசிய சூப்பர் ஸ்டார்:- இராமாயணம் எழுதியதால் கம்பருக்கு பெருமை அதுப் போலவே  இந்த ‘ புறநானூறு புதிய வரிசை வகை’ மூலம் சாலமன் பாப்பையா க்கு பெருமை என புகழாரம் சூட்டியவர்.

இன்றைய இளைய சமூகம் இதனை படித்து பயனடைய வேண்டும்.. மேலும் காலம் எப்போதும்  பேசாது, ஆனால் பதில் சொல்லும் என கூறினார். இதனால் அவர் அரசியல் பிரவேசம் குறித்த விமர்சனங்களுக்கு நூதனமாக பதில் அளித்துள்ளார். இதே போல் இந்த நிகழ்ச்சியில் திமுக எம்பி திருச்சி சிவா பேசினார்.

அப்போது சாலமன் பாப்பையாவின் நூல்களை தமிழக அரசின் நூலகங்களுக்கு வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்படி வாங்கவில்லை என்றால் ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு வாங்குவோம் என்று கூறினார். நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நடிகர் ரஜினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவர்களை வைத்துக் கொண்டே ஸ்டாலின் தான் அடுத்த முதலமைச்சர் என திருச்சி சிவா கூறியது விழா அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போது சிலர் ரஜினி தான் அடுத்த முதலமைச்சர் என்று குரல் எழுப்பியதால் சலசலப்பு தீவிரமானது.