சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் கூறிய நிலையில் இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினி அவருக்கு மிகப்பெரிய உதவி ஒன்றை மறைமுகமாக செய்துள்ளார்.
முதல் தீவிரவாதி இந்து! கமலை காப்பாற்றிய ரஜினி!

நாதுராம் கோட்சேவை தீவிரவாதி என்று கூறாமல் அவன் ஒரு இந்து தீவிரவாதி என்கிற ரீதியில் கமல் பேசியது மிகப்பெரிய சர்ச்சையாகியுள்ளது. இந்த விவகாரத்தில் கமல் மீதும் அவரது கட்சியின் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தர்பார் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் ரஜினி மும்பையில் இருந்து சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதாக கூறினார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள் நாட்டின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று உங்கள் நண்பர் கமல் கூறியிருப்பது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அது பற்றி நான் கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறிவிட்டு ரஜினி வேக வேகமாக சென்று விட்டார். மேலும் அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு அவர் தவிர்த்துவிட்டார். இந்த விவகாரத்தில் கமலுக்கு எதிராக ரஜினி ஏதேனும் பேசி இருந்தால் அதாவது கமல் கூறியது தவறு என்று மட்டும் கூறி இருந்தால் இந்தப் பிரச்சினையில் கமல் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார்.
ஆனால் தன்னுடைய நண்பர் தமிழ் இந்த விவகாரத்தில் தனிமைப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதற்காக கருத்து எதுவும் தெரிவிக்காமல் ரஜினி சென்று விட்டதாக கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ஆனால் இந்த விவகாரத்தில் கமல் பேசியது உண்மை தானே எனவே ரஜினி கமலுக்கு ஆதரவாக பேசி இருக்க வேண்டும் என்று கமல் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.